முதலமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தை மறுசீரமைப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் தலைமையில் இருந்த ஆலோசனை வாரியத்தை, தற்போது முதலமைச்சர் தலைமையில் மாற்றி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையிலான குழுவில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, போக்குவரத்து, சமூகநலன் உள்ளிட்ட 14 துறைகளைச் சார்ந்த முதன்மைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் எழிலன் உள்ளிட்ட 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வாரியத்தில் அலுவல்சாரா உறுப்பினர்களாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே: இசைக்கு வயது ‘80’’
மேலும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை முழுவதுமாக அனுபவிக்கும் விதத்தில் கொள்கை வகுப்பது இந்த வாரியத்தின் பிரதான பணியாக உள்ளது. அதேபோல, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுப்பது மற்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற சூழலை உருவாக்குதல், அவர்களுக்கான பாகுபாடுகளை போக்குதல் ஆகிய பணிகள் இந்த வாரியத்தின் பணியாக இருக்கும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் மூலம் தெரியவந்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.