கேரளாவில் தொற்று அதிகளவில் பதிவாகி வருவதால், எல்லையோர மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று நடந்து முடிந்த 10-வது கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 18 லட்சத்து 21ஆயிரத்து 5 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பொது இடங்களில் வருவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வரவேண்டும் எனக்கூறிய அவர், தடுப்பூசியை வீணாக்காமல், அதிக அளவில் தடுப்பூசி செலுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக கூறினார்.
கேரள மாநிலத்தில் தற்போதும் தொற்று அதிகளவில் பதிவாகி வருவதால், எல்லையோர மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.








