திமுக ஆட்சியில் எப்போதும் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திரு.வி.க நகர் சட்ட மன்ற தொகுதியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம் முகாமை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, திமுக ஆட்சியில் காவலர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருவதாக கூறினார்.
காக்கி சட்டை போட்டுள்ளவர்களுக்கே பாதுகாப்பில்லை என்றால் பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
திமுக ஆட்சியில் காவலர் தாக்கப்படுவது இது முதல் முறை இல்லை எனவும், ஏற்கனவே பல இடங்களில் திமுக ஆட்சியில் காவல் துறையினரை தாக்கும் சம்வம் நடந்துள்ளதாகவும், புளியந்தோப்பில் கூட காவலரை தாக்கிய சம்பவம் சமூக வலை தளங்கில் வீடியோ வைரலாகியது. இதற்கு முழுமையாக முற்று புள்ளி வைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.








