Skip to content
January 19, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » restore rights save the generation pmk logo released
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“உரிமை மீட்க… தலைமுறை காக்க” – பாமக இலட்சினை வெளியீடு!

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்திற்காக ‘உரிமை மீட்க… தலைமுறை காக்க’ இலட்சினை வெளியிடப்பட்டுள்ளது.

Author Avatar

Web Editor

July 23, 20251:10 pm AnbumaniRamadosslogologo releasedPMKTamilNaduthiruporur

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் 1. சமூக நீதிக்கான உரிமை, 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, 3. வேலைக்கான உரிமை, 4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, 5. வளர்ச்சிக்கான உரிமை, 6. நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை, 8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை, 9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை, 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகிய 10 வகையான அடிப்படை உரிமைகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்காமல் திமுக அரசு தடுத்து வருகிறது.

அந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுத்து தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும், அதன் மூலம் தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நாளை மறுநாள் (ஜூலை 25-ஆம் நாள்) வெள்ளிக்கிழமை தொடங்கி தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்ளவிருகிறேன். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கும் இந்த பயணம் தருமபுரியில் நிறைவடையவுள்ளது.

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: ‘ உரிமை மீட்க… தலைமுறை காக்க’ இலட்சினை வெளியீடு

இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் 1. சமூக நீதிக்கான உரிமை, 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, 3. வேலைக்கான உரிமை, 4. விவசாயம் மற்றும் உணவுக்கான… pic.twitter.com/JHTx31bLOp

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) July 23, 2025

இந்த பயணத்திற்காக ‘உரிமை மீட்க… தலைமுறை காக்க’ என்ற இலட்சினை தயாரிக்கப்பட்டுள்ளது. உங்கள் பார்வைக்காக அந்த இலட்சினையை இங்கு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

விஜய் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. ‘தெறி’ ரீ-ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு?

By Web Editor January 19, 2026

கரூர் வழக்கு | சிபிஐ முன்பு இன்று மீண்டும் ஆஜராகிறார் விஜய்!

By Web Editor January 19, 2026

கடைசி ஒரு நாள் போட்டி : இந்தியா போராடி தோல்வி….. தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து…!

By Web Editor January 18, 2026

முதலமைச்சரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை –  நயினார் நாகேந்திரன்……!

By Web Editor January 18, 2026
#ट्रेंडिंग हैशटैग:AnbumaniRamadosslogologo releasedPMKTamilNaduthiruporur

Post navigation

Previous Previous post: “ஒரு வாரத்தில் பொதுத்தேர்வு குறித்து அறிக்கை வெளியிடப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!
Next Next post: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading