பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இரு நாடுகளுக்கு இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்ட நிலையிலும் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில் இன்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், ”ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையிலான மோதலை தீர்ப்பது எனக்கு எளிது. “இந்தியா-பாகிஸ்தான் மோதல் உள்ளிட்ட எட்டு போர்களை நிறுத்தியுள்ளேன். மக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பது எனக்கு முக்கியம். நான் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளேன்” என்றார்.







