ஓடிடியில் வெளியாகிறது பவன் கல்யாணின் ’ஓஜி’ – எந்த தளத்தில்… எப்போது?

பவன்கல்யாணின் நடிப்பில் வெளியான ’ஓஜி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஆந்திர மாநில துணை முதல்வரும் தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரும் ஆவார். இவர் நடிப்பில் கடந்த 25 ஆம் தேதி  ‘ஓஜி’  திரைப்படம் வெளியானது.

இயக்குனர் சுஜீத் இயக்கிய இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் தமன் இப்படத்திற்கு இசையமத்துள்ளார்.

உலகளவில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக ஓஜி திரைப்படம் பவன்கல்யாணின் திரைவாழ்விலேயே அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது.

இந்த நிலையில் ஓஜி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வரும் (அக்) 23ல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.