வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் இன்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்று அரசினர் தீர்மானத்தை கொண்டுவர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதன்படி இன்று (வியாழக்கிழமை) சட்டசபையில், அதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய உள்ளார். பின்னர் அந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, நிறைவேற்றப்பட உள்ளது.







