தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: குரல்வாக்கெடுப்பு மூல நிறைவேற்றம்!

தொகுதி மறுவரையரைக்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தொகுதி முறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனைத்தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த தீர்மானத்திற்கு தவெக, திமுக, காங்கிரஸ் சிபிஐ, சிபிஐஎம், ஐயூஎம்எல், விசிக, மஜக, உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். அதேபோல அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தேமுதிக ஆதரவும் தெரிவிக்கவில்லை எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இந்த தீர்மானம் குறித்து அனைத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்தை கேட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இறுதியாக குரல் வாக்கெடுப்பு நடத்தினார். பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.