எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

காவிரி, மாணவர்கள் போராட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் மக்களைவை பிர்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மக்களவைத் தொடங்கியவுடன் திமுக மக்களவை குழு தலைவர் டி. ஆர். பாலு எழுந்து காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்த முயற்சித்தார்.

அவர், “ காவிரி நீர் பிரச்னையால் விவசாயிகளின் திலை வாழ்வா சாவா என உள்ளது. மக்கள் பிரச்னைகளை பேசத்தான் நாங்கள் நாடாளுமன்றத்துக்கு வருகிறோம். மக்கள் பிரச்சினையை பேச அனுமதிக்காமல் எப்படி நாடாளுமன்றத்தை நடத்த முடியும். தமிழக மக்களின் முக்கிய காவிரி பிரச்னையை பேச அனுமதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ஆனால் அவருக்கு பேச மைக் வழங்கப்படவில்லை இதனால் திமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதே போன்று மாண்வர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எழுப்பி முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.