தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு கொண்டுவர சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில், IIT, IIM, AIIMS உள்ளிட்ட அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் OBC பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பை, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்ந்து நடத்திட வேண்டும் என்றும்,மாநிலங்களின் தேவைக்கேற்ப இடஒதுக்கீட்டின் அளவை நிர்ணயிக்கும் உரிமை அந்தந்த மாநிலங்களுக்கு வழங்க அரசியலமைப்பில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், OBC இடஒதுக்கீட்டில், Creamy Layer பிரிவினரை நீக்காமல் செயல்படுத்திட வேண்டும் எனவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







