அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் சுமார் 60 தமிழர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையையும் அளிக்கிறது.
நேபாள நாட்டு அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்திட மத்திய அரசையும், அப்பணிகளுக்கான ஒருங்கிணைப்பையும், முறையான தகவல் பரிமாற்றத்தையும் உறுதி செய்திட மாநில அரசையும் வலியுறுத்துகிறேன்.
காணாமல் போனதாக தேடப்படும் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பத்திரமாக தாயகம் திரும்பிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.




