முக்கியச் செய்திகள் சினிமா

வீரப்பன் குடும்பம் வேண்டுகோள்: யோகிபாபு பட தலைப்பு மாற்றம்

வீரப்பன் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதை அடுத்து, யோகிபாபு படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் யாசின் இயக்கும் படம், ‘வீரப்பன் கஜானா’. ’ராட்சசி’இயக்குநர் சை கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் இணைந்து கதை எழுதியுள்ள இந்தப் படத்தில், யோகிபாபு, யூடியூபராக நடிக்கிறார். அவருடன் மொட்டை ராஜேந்திரனும் இணைந்துள்ளார்.
படத்துக்கு ‘வீரப்பனின் கஜானா’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும், கதைக்கும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று படக்குழுத் தெரிவித்துள்ளது.

முழுக்க முழுக்க சிறுவர்களை ஈர்க்கும் வகையிலும், பெரியவர்களை சிரிக்க வைக்கும் வகையிலும் காட்டையும், அது சார்ந்த விஷயங்களையும் சுவாரஸ்யமாக சொல்லும் வகையில் இப்படத்தின் திரைக்கதையும், காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ஆனால், படத்தின் தலைப்பு தொடர்பாக மறைந்த வீரப்பன் குடும்பத்தார், வீரப்பன் என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதை ஏற்று தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளனர். புதிய தலைப்பை படக்குழு விரைவில் அதிகார பூர்வமாக அறிவிக்க உள்ளனது.

படத்தை, ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் பிரபாதீஸ் ஷாம்ஸ் தயாரிக்கிறார். யோகிபாபுவுடன் ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா ஆகியோரும் நடிக்கின்றனர்.
படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ளன.

Advertisement:
SHARE

Related posts

மேலிட தலையீட்டால் விரக்தி: கோவா ஆம் ஆத்மி தலைவர் ராஜினாமா!

Arun

தமிழகத்தை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா!

Niruban Chakkaaravarthi

தமிழகத்தில் புதிதாக 867 பேருக்கு கொரோனா தொற்று!

Jeba Arul Robinson