முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பள்ளி மாணவர் சேர்க்கையில் உச்சத்தைத் தொட்ட இந்தியா – ஆய்வில் புதிய தகவல்

பள்ளிகளில் கற்றல் முடிவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஆண்டு கல்வி நிலை அறிக்கை (ASER), நேற்று வெளியிடப்பட்டது. இது நாட்டின் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்களின் நிலையைப் படம்பிடித்து காட்டும் ஒரு முக்கிய தேசிய கணக்கெடுப்பாக இது கருதப்படுகிறது.

பிரதம் அறக்கட்டளையின் தலைமையிலான இந்த கணக்கெடுப்பு, கடைசியாக 2018 இல் தான் நடத்தப்பட்டது. கோவிட்-19 பாதிப்புக்கு பிறகு , ASER தொலைபேசி அடிப்படையிலான மற்றும் பள்ளிகளில் டிஜிட்டல் சமத்துவமின்மை மற்றும் சேர்க்கை நிலைகளை ஆராய்வதில் கடந்த 4 ஆண்டுகளாக கவனம் செலுத்தி வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் தற்போது 2022 இல், பிரதம் அதன் கள ஆய்வை மீண்டும் தொடங்கியது. கணக்கெடுப்பாளர்கள் மாநிலங்கள் முழுவதும் பரவி, கற்றல் நிலையைப் ஆராய இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் நேருக்கு நேர் தொடர்புகளை நடத்தினர். அதில் கிட்டத்தட்ட 616 மாவட்டங்களில் உள்ள 19,060
பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 7 லட்சம் விண்ணப்பதாரர்கள், பள்ளிக் குழந்தைகளுக்கு தொற்றுநோய்க்குப் பிந்தைய கற்றல் விளைவுகளைக் கணக்கிடுவதற்காக கணக்கெடுக்கப்பட்டனர்.

இந்த ஆய்வின் முடிவில் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சேர்க்கை அளவுகள் 2010 இல் 96.6 சதவீதத்திலிருந்து 2014 இல் 96.7 சதவீதமாகவும், 2018 இல் 97.2 சதவீதமாகவும் 2022 இல் 98.4 சதவீதமாகவும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை வெளிப்படுத்துகிறது. இது தவிர 2018 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 7.3 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2018 மற்றும் 2022 க்கு இடையில் டியூஷன் வகுப்புகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும், அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை காட்டுவதுடன். இதில் விதிவிலக்காக குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொற்றுநோய் காலத்தில் பள்ளி மாணவர்களிடையே கணிதத் திறன்களைக் காட்டிலும் வாசிப்புத் திறன் குறைந்துள்ளதாகவும், குறிப்பாக 3 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வாசிப்புத் திறன் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இதற்கு முக்கிய காரணமாக கோவிட் பாதிப்பு ஆண்டுகளில் குழந்தைகள் கணினிகள் மற்றும் மொபைல் போன்களுடன் அதிக நேரம்
செலவிட்டதால் இந்த நிலை வந்திருக்கலாம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வெளிவந்துள்ள ASER அறிக்கையின் முக்கிய விவரங்களை கீழே காண்போம்.

● பள்ளி மாணவர் சேர்க்கை சாதனை உச்சத்தைத் தொட்டது (2022 இல் 98.4%, 2018 இல் 97.2%)

● சேர்க்கப்படாத பெண் குழந்தைகளின் விகிதம் (11-14 வயது) குறைந்துள்ளது. (2006 இல் 10.3%, 2018 இல் 4.1%, 2022 இல் 2%)

● அரசுப் பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் (11 – 14 வயது) சதவீதம் 2018 இல் 65% ஆக இருந்து 2022 இல் 71.7% ஆக உயர்ந்துள்ளது.

● தொற்றுநோய் காலத்தில் பள்ளிகள் நீண்ட காலமாக மூடப்பட்ட பிறகும், 2018 மற்றும் 2022 க்கு இடையில் பள்ளியில்சேர்க்கப்படாத குழந்தைகளின் விகிதம் தொடர்ந்து குறைந்துள்ளது.

● அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் (FLN) கற்றல் நிலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

● 3 ஆம் வகுப்பில் உள்ள குழந்தைகளின் அடிப்படை வாசிப்புத் திறன் 2018 இல் 27.2% இல் இருந்து 6.8% புள்ளிகள் குறைந்துள்ளது.

● 3 ஆம் வகுப்பில் குறைந்த பட்சம் கழித்தல் செய்யக்கூடிய குழந்தைகளின் விகிதம் 28.2% இலிருந்து 25.9% ஆகக் குறைந்துள்ளது.

● கோவிட்க்குப் பிறகு தனியார் பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆவின் பால்பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

Arivazhagan Chinnasamy

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: துப்பாக்கியால் 17 ரவுண்டு சுடப்பட்டுள்ளது; அறிக்கையில் தகவல்

G SaravanaKumar

’பீஸ்ட்..’ இதுதான் ’தளபதி 65’படத்தின் டைட்டில்!

Vandhana