நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு முக்கிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் விழாவுக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி நாளை தேசியக் கொடியினை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதனை முன்னிட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குடியரசு தினத்தி முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய இடங்கள் மூவர்ண விளக்குகளாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் விளக்குகளால் நிரப்பப்பட்டு பிரகாசிக்கின்றன.
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையமும் தேசியக் கொடியில் உள்ள மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உச்சநீதிமன்றமும் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களும் மூவர்ண விளக்கின் ஒளியில் பிரகாசிக்கின்றன.
மேலும், ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் உள்ள சலால் மின் நிலையம், சோபோர் நகரில் உள்ள கடிகார கோபுரம் மற்றும் நான்கு தாவி பாலங்களும், குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ண ஒளி வீசுகின்றன.