நடிகர் சரத்பாபு உயிரிழந்ததாக வரும் செய்திகள் தவறானவை – குடும்பத்தினர் விளக்கம்!

நடிகர் சரத்பாபு உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் தவறானவை என்று அவரது சகோதரி விளக்கமளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார்…

நடிகர் சரத்பாபு உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் தவறானவை என்று அவரது சகோதரி விளக்கமளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானதாக சமூக வலைதளங்கள்/ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்திகள் அனைத்தும் தவறானவை என்று அவரது சகோதரி விளக்கமளித்துள்ளார்.

நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்த அவர், “சமூக வலைதளங்களில் சரத்பாபு பற்றி தவறாக செய்திகள் வருகின்றன. சரத்பாபு சற்று குணமடைந்துள்ளதால், அவரது அறை மாற்றப்பட்டுள்ளது. சரத்பாபு விரைவில் பூரண குணமடைந்து மீடியாக்களிடம் பேசுவார் என்று நம்புகிறேன். சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.