ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சார் பட்டேல் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 212 ரன்கள் குவித்துள்ளது.
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரகளாக சஞ்சு மற்றும் ருத்ராஜ் ஆகியோர் களமிறங்கினர். கேப்டன் ருத்ராஜ் கெய்க் வார்ட் இந்த போட்டியிலும் விரைவில் அவுட் ஆகி வெளியேறினார். ஆனாலும் இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆயுஷ் மாத்ரேவுடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முந்தைய போட்டிகளுக்கு பதில் சொல்லும் விதமாக சஞ்சு சாம்சு சாம்சன் 56 பந்துகளில் 115 ரன்கள் விளாசினார். அதே போல ஆயுஷ் மாத்ரேவும் 56 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் அண்யின் ஸ்கோர் கணிசமான அளவு உயர்ந்தது.
டெல்லி அணி சார்பில் அந்த அணியின் கேப்டன் அக்சார் பட்டேல் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். முக்கியமான தருணங்களில் சிஎஸ்கே பேட்டர்களின் கேட்சுகளை டெல்லி அணி வீரர்கள் தவறவிட்டனர்.
இதனை தொடர்ந்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்க உள்ளது.







