கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியின் சீரமைப்பு பணிகளை காவல் துறையினர் பாதுகாப்போடு மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் சின்னசேலம் அடுத்த கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி 13-7-22 அன்று உயிரிழந்தார் அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது17-7-22- அன்று மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி பள்ளி கட்டிடம் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டும் வாகனங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் வகுப்பறையில் உள்ள பொருட்கள் முழுவதும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இச்சம்பவத்திற்கு பிறகு பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் பள்ளியை சீரமைக்கவும் பள்ளியை தொடர்ந்து நடத்தவும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்திற்கு பள்ளியை சீரமைக்க உரிய அதிகாரிகளை நியமித்தும் கள நிலவரங்களை ஆய்வு மேற்கொண்டும் அனுமதி அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்றைய முன் தினம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் சேதமடைந்த பொருட்களை அப்புறப்படுத்தி பள்ளியை புணரமைக்க 45 நாட்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார் .இதனைத் தொடர்ந்து இன்று பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் போலீஸ் பாதுகாப்புடன் சேதமடைந்த பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.