முக்கியச் செய்திகள் சினிமா

விடுதலை படத்தின் ஆக் ஷன் காட்சிகளுக்காக ரூ.10 கோடி செலவில் பிரம்மாண்ட செட்!

ரூ.10-கோடி மதிப்பிலான ரயில் மற்றும் ரயில்வே பாலத்தின் செட் விடுதலை படத்தின் பிரமாண்டத்தைக் கூட்டியுள்ளது. சிறுமலையில் ஜாக்கி தலைமையிலான கலைத்துறை ஒரு கிராமத்தினை அச்சு அசலாக உருவாக்கியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் கதாபாத்திரத்திலும் & சூரி முதன்மை பாத்திரத்திலும் நடிக்கும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இப்படத்தினை பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சூரி நாயகன் என்பதில் ஆரம்பித்து இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. தொடர் வெற்றிப்படங்களின் பிரம்மாண்டமாக மாறியிருக்கும் ரெட் ஜெயண்ட் திரைப்படங்கள் நிறுவனம் விடுதலை படத்தினை வெளியிடுவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.விடுதலை- பாகம் 1இன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பும் ஏறக்குறைய முடிவடைய உள்ள நிலையில் தற்போது சிறுமலை மற்றும் கொடைக்கானலில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

சமீபத்தில் அமைக்கப்பட்ட ரூ.10-கோடி மதிப்பிலான ரயில் மற்றும் ரயில்வே பாலத்தின் செட் இப்படத்தின் பிரமாண்டத்தைக் கூட்டியுள்ளது. ரயில் பெட்டிகள் மற்றும் பாலம் ஆகியவை அச்சு அசலாகத் தோற்றமளிக்க, பாலம் மற்றும் ரயிலின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அதே பொருட்களைக் கொண்டு இந்த செட் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சிறுமலையில் ஜாக்கி தலைமையிலான கலைத்துறை ஒரு கிராமத்தினை அச்சு அசலாக உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது, கொடைக்கானலில் ஆக்‌ஷன் காட்சியைப் படமாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரபல ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இந்த ஆக்‌ஷன் காட்சியை அமைக்கிறார். பல்கேரியாவில் இருந்து ஏற்கனவே தமிழகம் வந்திருக்கும் திறமையான ஸ்டண்ட் டீம் இந்த ஆக்‌ஷன் ப்ளாக்கில் பங்கேற்றுவருகிறனர்.

இந்நிலையில் இப்படத்தில் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதிக்குப் பதிலாக முதலில் இயக்குநர் பாரதி ராஜாவை நடிக்க வைக்க இயக்குநர் வெற்றிமாறன் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்தில் இயக்குநர் பாரதி ராஜா இந்த படத்தில் இணையமுடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. சமீப காலமாக இயக்குநர் பாரதி ராஜா இளம் தலைமுறையினரோடு இணைந்து பல படங்களில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரி சட்டச்சபை; காங்கிரஸ்-திமுக வெளிநடப்பு

G SaravanaKumar

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,116 பேருக்கு கொரோனா

Web Editor

குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம்: நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு

Web Editor