எலான் மஸ்க்கின் அரிய புகைப்படங்களை ரூ.1.3 கோடிக்கு விற்ற முன்னாள் காதலி!

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்கின் காதல் கடிதங்கள் மற்றும் புகைப்படங்களை லட்சக்கணக்கான டாலருக்கு ஏலம் விட்ட முன்னாள் காதலி. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் கல்லூரி கால காதல் கடிதங்கள்…

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்கின் காதல் கடிதங்கள் மற்றும் புகைப்படங்களை லட்சக்கணக்கான டாலருக்கு ஏலம் விட்ட முன்னாள் காதலி.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் கல்லூரி கால காதல் கடிதங்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை, ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய்க்கு அவரது முன்னாள் காதலி விற்பனை செய்தார். எலான் மஸ்க் தன் கல்லூரி பருவத்தில் ஜெனிஃபர் க்வின் என்பவரைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது.

எலோன் மஸ்க்கின் முன்னாள் காதலி ஜெனிஃபர் க்வின், மஸ்க் வழங்கிய சில பொருட்களை $165,000 டாலர் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 1.3 கோடிக்கு ஏலத்தில் விற்றுள்ளார். இதுவரை யாரும் பார்த்திராத இப்புகைப்படங்கள் மற்றும் மஸ்க் தனது கல்லூரி காதலி ஜெனிஃபருக்கு வழங்கிய கடிதங்கள் தற்போது இணையத்தில் வரலாகி வருகிறது.

மஸ்க் மற்றும் ஜெனிஃபர் இருவரும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது 1994 மற்றும் 1995க்கு இடையில் காதலித்து வந்துள்ளனர். சுமார் ஒரு வருட காலம் இருவரும் காதலித்து வந்த நிலையில், கல்லூரி படிப்பை முடித்து மஸ்க் பட்டம் பெற்று கலிபோர்னியாவுக்குச் சென்று விட்டதால் மஸ்க் மற்றும் ஜெனிஃபர் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெனிஃபரின் பிறந்தநாளில் மஸ்க் பரிசளித்த சிறிய மரகதக் கல்லுடன் கூடிய தங்க நெக்லஸ் $51,000 டாலருக்கு, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ 40 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. மேலும் அதனுடன் அவர் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டை கிட்டத்தட்ட $17,000 டாலருக்கு, அதாவது சுமார் ரூ. 14 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது.

ஜெனிஃபர் தனது வளர்ப்பு மகனின் கல்லூரி கட்டண செலவுகளை ஈடுகட்ட இந்த புகைப்படங்களை ஏலத்திற்கு விட்டதாகக் கூறப்படுகிறது. எலான் மஸ்கின் கடந்த கால காதல் வாழ்க்கையில் பகிரப்பட்ட கடிதங்களும் பரிசுகளும் லட்சக்கணக்கில் ஏலம் போன இந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.