முக்கியச் செய்திகள் தமிழகம்

ரிமோட் வாக்குப்பதிவு முறை கருத்து கேட்பு கூட்டம்; அதிமுக இரட்டை தலைமைக்கு கடிதம்

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து தேர்தல் ஆணையம்
நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகிய இருவருக்கும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார்.

மாநிலத்திற்குள் அல்லது மாநிலம் விட்டு மாநிலம் சென்று கூலி வேலை செய்யும்
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஒரு முன் மாதிரி ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் விதம் குறித்து செயல்முறை விளக்கம் அளிப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுக்கு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் அனுப்பியுள்ளார். அதிமுகவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடிதத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பியிருக்கும் கடிதத்தில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டிருப்பதால் நிர்வாகிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“என்.எல்.சி-க்கு எதிரான போராட்டம் தொடரும்” – நியூஸ்7 தமிழுக்கு அன்புமணி ராமதாஸ் பிரத்யேக பேட்டி

G SaravanaKumar

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்; சி.பி.சி.ஐ.டி எச்சரிக்கை

Arivazhagan Chinnasamy

இந்தியாவில் புதிதாக 16,047 பேருக்கு கொரோனா

Web Editor