மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் -அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

மழையால் ஏற்பட்ட சேதங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை குறித்த விவரங்களை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வெளியிட்டார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்…

மழையால் ஏற்பட்ட சேதங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை குறித்த விவரங்களை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வெளியிட்டார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அவர், வடகிழக்கு பருவமழை தற்போது குறைந்து மீண்டும் மூன்று அல்லது நான்கு நாட்களில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.

வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கும் போது அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை அழைத்து தயாரான நிலையில் இருக்குமாறு முதல்வர் உத்தரவிட்டிருந்தார், பருவமழை தொடங்கும் முன்பே தயார் நிலையிலிருந்ததால் தற்போது மழை வெள்ள பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மழையால் ஏற்பட்ட சேதங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை குறித்த விவரங்களை அமைச்சர் வெளியிட்டார், வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து இருந்தால் 4,800 ரூபாய்,குடிசை வீடு முழுவதுமாக சேதம் அடைந்திருந்தால் 5000 ரூபாய், குடிசை வீடு பகுதி சேதம் அடைந்திருந்தால் குடிசை ஒன்றிற்கு 4,100 ரூபாய்,கான்கிரீட் கட்டிடம் இடிந்து இருந்தால் 95,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும் தமிழக முதல்வர் வெள்ளம் பாதிப்புகளை நேரடியாகப் பார்வையிட்டு வந்த பிறகு அதற்கான நிவாரண தொகையை வழங்குவதற்கான பணிகளை வழங்க உள்ளோம். மழைநீர் வடிந்த உடன் முதலமைச்சருடன் ஆலோசித்துப் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கான விலை நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறினார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காகக் கடலூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் விழுப்புரம் தேனி ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 99 முகாம்கள் திறக்கப்பட்டு 52,751 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தற்பொழுது பெய்துள்ள மழையைப் பேரிடராகக் கருதவில்லை. மத்திய அரசிடம் நிதி கேட்பது தொடர்பாக முதல்வர் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு வந்த பிறகு ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

இதுவரை சென்னையில் நிவாரண முகாம்கள் திறக்கப்படவில்லை. மழை வெள்ள பாதிப்பால் பசு மாடு எருமை மாடு இறந்திருந்தால் முப்பதாயிரம் ரூபாயும், பன்றி இறந்திருந்தால் மூவாயிரம் ரூபாயும் எருது ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் கன்று குட்டிக்கு 16 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

அதேபோல மழையின் போது ஏற்படும் மனித உயிர் இழப்புக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இதுவரை தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பால் 35 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.