காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50 வது கூட்டம் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைப்பெற்றது. காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
தமிழ்நாட்டின் சார்பில் நீர்வளத் துறை செயலாளர் ஜெயகாந்தன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இன்றைய கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணைகளின் நீர்வரத்து, நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் பற்றிய புள்ளி விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் மே மாதம் தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து 2.5 TMC தண்ணீர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகம் திறந்து விட வேண்டும். எனவே அந்த நீரைரை கர்நாடகம் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அதிகாரிகள் கோரிக்கை வைத்தார்கள். தமிழக அரசு அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் “மே மாதம் 2.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டார்.




