“ஆ.ராசாவின் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது” – பெ. சண்முகம்!

திமுக துணைப் பொதுச் செயலர் ஆ.ராசாவின் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது என்று சிபிஎம் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

திமுக துணைப் பொதுச் செயலர் ஆ.ராசாவின் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெ. சண்முகம் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

”திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும் அதைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியவில்லை. அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டியுங்கள். அவருடைய தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பொதுவெளியில் பெண்களை இழிவு படுத்தி பேசுபவர் யாராக இருந்தாலும் அந்தந்த கட்சி தலைமை கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முன்வர வேண்டும். சில திமுகவினர் “கண்ணியம்” தவறுவது தொடர்கிறது. “கட்டுப்பாடு” நிலை நிறுத்தும் “கடமை”யை திமுக. தலைவர் செய்வார் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.