அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பு; முற்றுகையிட்ட பெண்கள்

பேருந்து நிறுத்தத்தில் பெண்களை ஏற்றாமல் சென்ற பேருந்தை திரும்பி வரும் போது வழிமறித்து பெண்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அரசு பேருந்து டிப்போவை சேர்ந்த 43 எண் வழித்தட டவுன்…

பேருந்து நிறுத்தத்தில் பெண்களை ஏற்றாமல் சென்ற பேருந்தை திரும்பி வரும் போது வழிமறித்து பெண்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அரசு பேருந்து டிப்போவை சேர்ந்த 43 எண் வழித்தட டவுன் பேருந்து கொடுமுடியில் இருந்து ஈரோடு வரை இரண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஈரோட்டில் இருந்து கொடுமுடி செல்லும் போது மணிமுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுமுடி செல்வதற்கு கைகாட்டி உள்ளார்கள். பேருந்தை ஓட்டி வந்த ஊஞ்சலூரை சேர்ந்த சங்கர் என்ற ஓட்டுனர் பேருந்தை நிறுத்தாமல் சென்று விட்டார்.

இதனால் கோபம் அடைந்த பெண்கள் ஊஞ்சலூர் வரை நடந்தே சென்று பேருந்து திரும்பி வரும் வரை காத்து இருந்தனர். கொடுமுடி சென்ற பேருந்து  மீண்டும் திரும்ப வந்தபோது பேருந்தை வழிமறித்து ஓட்டுனர் சங்கரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுவாக பெண்களுக்கு நகர பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு செய்தாலும் இது போன்ற டிரைவர்கள் மற்றும் நடத்துனர் ஆகியோரது நடத்தையால் அரசுக்கும், இத்திட்டம் கொண்டு வந்த முதல்வருக்கும் கெட்ட பெயர் ஏற்படுகின்றது. இது குறித்து தகவலை அதிகாரிகளிடம் தெரிவித்தால் பேருந்தை கிலோ மீட்டர் இழப்பு ஏற்படாமல் ஓடினால் போதும் என்று தவறு செய்யும் ஓட்டுனர், நடத்துனர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை இது போன்ற ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொது நல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.