பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு; மத்திய அரசு

பல்வேறு தரப்பில் இருந்தும் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ளது. தீபாவளியையொட்டி பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ.5-ம், டீசல் மீதான…

பல்வேறு தரப்பில் இருந்தும் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ளது.

தீபாவளியையொட்டி பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ.5-ம், டீசல் மீதான வரியில் ரூ.10-ம் குறைப்பதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிவித்து உள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாள்தோறும் உச்சம் தொட்டு வந்த பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என கூறியுள்ள மத்திய அரசு, இதை பின்பற்றி மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.