முக்கியச் செய்திகள் தமிழகம்

காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு; மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சட்டப்‌பேரவையில்‌, கடந்த செப். 13-ஆம் தேதி நடந்த காவல்‌துறை மானியக்‌ கோரிக்கையின்‌ மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின், ‌‘காவலர்கள்‌ தங்கள்‌ உடல்‌நலனை பேணிக்‌ காத்திட ஏதுவாகவும்‌, தங்களது குடும்பத்தினருடன்‌ போதிய நேரம்‌ செலவிடுவதற்காகவும்‌, இரண்டாம்‌ நிலை காவலர்கள்‌ முதல்‌ தலைமைக்‌ காவலர்‌ வரையிலான காவலர்கள்‌ அனைவருக்கும்‌ வாரத்தில்‌ ஒரு நாள்‌ ஓய்வு வழங்கப்படும்‌’ என்று அறிவித்தார்‌.

அதன்படி, காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் விடுப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரை அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு அளிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு காவல்துறை சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் இன்று முதல் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு!

Vandhana

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றமா? நாளை அறிவிக்கிறது நேபாள அரசு!

Jayapriya

பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்!

Ezhilarasan