“தமிழகத்தின் சுற்றுலா விகிதத்தை பாதியாக குறைத்ததே திறனற்ற திமுக அரசின் சாதனை” – அதிமுக குற்றச்சாட்டு!

சுற்றுலா வளம் கொண்ட நம் தமிழகத்தின் சுற்றுலா விகிதத்தை பாதியாக குறைத்ததே திறனற்ற திமுக அரசின் சாதனை என்று அதிமுக தலைமை விமர்சனம் செய்துள்ளது.

அதிமுக தலைமை கழகம் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கடற்கரைகள், திருக்கோயில்கள் என மிகப்பெரிய சுற்றுலா வளம் கொண்ட நம் தமிழகத்தின் சுற்றுலா விகிதத்தை பாதியாக குறைத்ததே திறனற்ற திமுக அரசின் சாதனை!

கொரோனாவிற்கு பிறகான வளர்ச்சிப் பாதையை நாடே மீட்டெடுக்க, வெறும் 62 சதவீதத்தோடு பின்தங்கி நிற்கிறது தமிழ்நாடு!

திமுக ஆட்சியின் பொய்யும் போலியுமான விளம்பரங்களுக்கு அப்பால் இருக்கும் உண்மை இதுவே!

இந்த நிலை மாற, தலைசிறந்த சுற்றுலா தளமாக தமிழகத்தை பார்நோக்க,

வாக்களிப்பீர் – இரட்டை இலை ! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.