தென்தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ‘ரெட் அலர்ட்’ வாபஸ்!

தென் தமிழ்நாடு கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக வெப்ப அலை…

தென் தமிழ்நாடு கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக வெப்ப அலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியது.  ஈரோடு மாவட்டத்தில் 112 டிகிரி அளவுக்கு கோடை வெயின் தாக்கம் அதிகரித்து இருந்தது.  வெப்ப அலை காரணரமாக பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர்.

தமிழ்நாட்டில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் தற்போது கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது.  கோவை,  நீலகிரி,  நெல்லை,  தென்காசி,  கன்னியாகுமரி,  மதுரை, ராமநாதபுரம்,  தஞ்சாவூர்,  திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இதையடுத்து, தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.  மேலும்,  கன்னியாகுமரி,  நெல்லை, மதுரை,  திண்டுக்கல்,  திருப்பூர்,  கோவை,  நீலகிரி,  சிவகங்கை,  புதுக்கோட்டை,  தஞ்சாவூர்,  திருவாரூர்,  நாகை,  மயிலாடுதுறை மாவட்டங்கள்,  காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதையும் படியுங்கள் :தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரி முதலமாண்டு மாணவர் சேர்க்கை – மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!

இதனிடையே, தேனி,  தென்காசி,  நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும்,  நாளையும் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.  இந்நிலையில்,  தற்போது அந்த 4 மாவட்டங்களில், சிவப்பு எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.