வங்கக்கடலில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாகச் சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
மேலும் இதன் காரணமாகச் சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனையடுத்து வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி புதுச்சேரியில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் 300 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால், தற்போது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கன மற்றும் மிக கன மழை பெய்து வருவதனால் வீடுகளுக்குள் மீண்டும் தண்ணீர் புகுந்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.








