அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு முடித்துவைப்பு!

அமலாக்கத்துறை காவல் குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் என்று கூறி அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த…

அமலாக்கத்துறை காவல் குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் என்று கூறி அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகிய இரு நீதிபதிகள்கொண்ட அமர்வு மாறுப்பட்ட உத்தரவை பிறப்பித்திருந்தனர். இதையடுத்து, மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திக்கேயன்,செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என தீர்ப்பளித்தார்.

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்பது முடிவெடுக்க இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்த மூன்றாவது நீதிபதி பரிந்துரைத்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் முடியும் வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை நிலுவையில் வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

அப்போது நீதிபதி நிஷா பானு, நான் எனது தீர்ப்பில் உறுதியாக உள்ளேன். தற்போது இரு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் அணுகியுள்ளதால் இந்த விஷயத்தில் நான் எதுவும் கூறப்போவதில்லை. இந்த வழக்கை நான் இனி விசாரிக்கவில்லை என கூறினார். இந்த வழக்கில் அனைத்தையும் உச்சநீதிமன்றம் தீர்மானிக்கட்டும். வழக்கை முடித்து வைக்கிறோம் என்றும் நீதிபதி நிஷா பானு தெரிவித்தார்.நீதிபதி பரத சக்ரவர்த்தி இவ்வழக்கில் இரு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதால், நாங்கள் எதுவும் கூற வேண்டியதில்லை என்று கூறினார்.

அதோடு, அமலாக்கத்துறை காவல் குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் என்று கூறி செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து இரு நீதிபதிகளும் உத்தரவை பிறப்பித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.