முக்கியச் செய்திகள் உலகம்

தலிபான் அரசுடன் ஒன்றிணைந்து செயல்படத் தயார்: பிரிட்டன் பிரதமர் 

 தேவைப்பட்டால் தலிபான் அரசுடன் ஒன்றிணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தானில் இருந்து பெரும்பாலான அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், ஆப்கன் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றினர். இதனால் பதவியை ராஜினாமா செய்த அதிபர் அஷ்ரப் கனி, அண்டை நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அங்கு புதிய அரசை அமைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். தலிபான்களுக்கு சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் லண்டனில் செய்தியாளர்களிடையே பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆப்கனில் இருந்து வெளியேற மக்கள் முயன்றதால் ஏற்பட்ட பதற்றம் சற்று தனித்துள்ளதாக தெரிவித்தார்.

ஆப்கன் பிரச்சனைக்கு தீர்வு காண அரசியல் மற்றும் ராஜாங்க ரீதியிலான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். தேவைப்பட்டால் ஆட்சி அமைப்பதில் தலிபான்களுக்கு உதவி செய்வோம் என்றும் போரிஸ் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 7 பேருக்கு தூக்கு

Gayathri Venkatesan

ஆக்சிஜன் 90-க்கு மேல் இருந்தால் அனுமதியில்லை: தமிழக அரசு

பாதுகாப்பு அதிகாரி தற்கொலை வழக்கு: விசாரணைக்கு ஆஜராகாத சுவேந்து அதிகாரி

Ezhilarasan