பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது

சென்னையில் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக லாரி கிளீனரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் சென்னை திருவொற்றியூர் பகுதியில் லாரி…

சென்னையில் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக லாரி கிளீனரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் சென்னை திருவொற்றியூர் பகுதியில் லாரி கிளீனராக வேலை செய்து வருகிறார். பணியில் உள்ளபோது அதே பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகியுள்ளார். பின்னர் அவரை காதலிப்பதாகக் கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், திருப்பதி தங்கியிருந்த ஊருக்கு சென்று சிறுமியை மீட்டனர். போலீசாரின் விசாரணையில்தான் மாணவி கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து திருப்பதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார்,  சிறையிலடைத்தனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.