முக்கியச் செய்திகள் இந்தியா

“விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்” – மத்திய அமைச்சர்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் நடத்த தயார் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாய ஒப்பந்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் உள்ளிட்ட மூன்று புதிய வேளாண் மசோதாக்கள் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனையடுத்து இன்று (ஜூலை 22) தொடங்கும் இந்த போராட்டம் ஆகஸ்ட் 9 வரை நடைபெறுகிறது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரும் ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், “இந்தை மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும். ஏற்கெனவே இந்த சட்டங்கள் குறித்து நாம் விவாதித்துள்ளோம். சட்டத்தில் உள்ள பாதகங்கள் குறித்து விவசாயிகள் விளக்குவார்கள் எனில் மத்திய அரசு அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது.” என போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

மேற்கு வங்கத்தில் பாஜகவின் வெற்றி உறுதி: அமத்ஷா பேச்சு

Jeba Arul Robinson

ஜெயலலிதா பாணியில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Halley karthi

விம்பிள்டன் டென்னிஸ் முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி!

Vandhana