முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”முல்லை பெரியாறு அணை உரிமைக்காக மீண்டும் போராட தயார்” – வைகோ பேச்சு

தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை மற்றும் நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக திருமண விழாவில் வைகோ உரையாற்றினார்.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் மதிமுக மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் மகன் சுபாஷ் சுந்தர் – பவ்யா இல்ல திருமண விழாவில் ம.தி.மு.க கழக பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருமண விழாவில் வைகோ பேசியதாவது: முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். தற்பொழுது வரை கேரளா அரசு புதிய அணை கட்டுவதாக தகவல் தெரிவித்து வருகிறது. அவ்வாறு கேரளா அரசு புதிய அணையை கட்டினால் அணையை நம்பியுள்ள ஐந்து மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் சூழ்நிலை ஏற்படும்.

நியூட்ரினோ ஆய்வு மையத்தை தேனி மாவட்டத்தில் செயல்படுத்தினால் முல்லைப் பெரியாறு அணை மற்றும் இடுக்கி அணை இரு அணைகளும் உடைந்து தண்ணீர் கிடைக்காத அபாயம் ஏற்பட்டு இரண்டு மாநிலங்களுமே அழிவிற்கு செல்லும் அபாய நிலை ஏற்படும் சூழ்நிலை நிலவும். எனவே நியூட்ரினோ ஆய்வு மையத்தையும், கேரள அரசு புதிதாக முல்லைப் பெரியாறு அணையை கட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மீண்டும் தேனி மாவட்டத்தில் நடை பயணம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்த தயாராக இருக்கிற்றோம். இவ்வாறு வைகோ பேசினார்.

அண்மைச் செய்தி: திருச்செந்தூர் அமலி நகர் மீனவர்கள் போராட்டம் வாபஸ்

இந்த திருமண விழாவில் கழக செயலாளர் துரை வைகோ, கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.பி.செல்வேந்திரன் மற்றும் தி.மு.க வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்பட ம.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் இன்று 841 பேருக்கு கொரோனா தொற்று

EZHILARASAN D

மக்களின் வரி பணத்தை அதிமுக அரசு வீணடித்துள்ளது: திராவிடன் அறக்கட்டளை

Halley Karthik

ஏற்றுக்கொள்ளக் கூடிய விலையில் சிமெண்ட் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை: தயாரிப்பாளர்கள் உறுதி

Halley Karthik