மீண்டும் இராணுவ நடவடிக்கைக்கு தயார் ; ஈரானுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை…!

சமாதான ஒப்பந்தம் ஒன்றை ஈரான் எட்டத் தவறினால், இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த ஏப். 8 முதல் தற்காலிக போர்நிறுத்தம் அமலில் உள்ளது. மேலும் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் நிரந்தர அமைதிக்காக பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது ;

ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பது உலகளாவிய அணு ஆயுதப் போட்டியை தூண்டும். மேலும் சமாதான ஒப்பந்தம் ஒன்றை ஈரான் எட்டத் தவறினால், இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அமெரிக்கா தயார் நிலையில் உள்ளது.

ஈரானியர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி எங்களிடம் கேட்டுக்கொண்டார். நாங்கள் அதைத்தான் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.