முக்கியச் செய்திகள் இந்தியா

வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது: மத்திய அரசு மீண்டும் திட்டவட்டம்

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப ப் பெற முடியாது என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் ஏழு மாதங்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளுடன் மத்திய அரசு 10 முறைகளுக்கும் மேல் பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. விவசாயிகள் கோரும் திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்றும் மத்திய அரசு ஏற்கனவே கூறியிருக்கிறது.

ஆனால், விவசாயிகளோ மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கின்றனர். இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறைஅமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய அரசு இன்னும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக விவசாயிகளிடம் சொல்லி இருக்கின்றோம். மூன்று வேளாண் சட்டங்களையும் திருப்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை விட்டுக் கொடுத்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று சொல்லியிருக்கின்றோம் என்றார்.
மத்திய வேளாண் துறை அமைச்சரின் கோரிக்கை குறித்து விவசாயிகள் இதுவரை பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

Advertisement:

Related posts

காதலியை காண மணப்பெண்போல் வேடம் அணிந்த காதலுனுக்கு அடி உதை!

Saravana Kumar

கேரளாவில் இடதுசாரி கூட்டணி முன்னிலை!

Jeba Arul Robinson

88 நாட்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் குறைந்த கொரோனா எண்ணிக்கை!

Vandhana