முக்கியச் செய்திகள் குற்றம்

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் கைது!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 15 வயது சிறுமியை பாலியல் வண்கொடுமை செய்த 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யபட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது பெற்றோர் மருத்துவனைக்கு அழைத்து சென்று பரிசோதித்துள்ளனர்.

அப்போது, சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது தாய் அளித்த தகவலின் அடிப்படையில் சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த 17 வயது சிறுவன் மீது அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் சிறுவனை மகளிர் போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

Advertisement:
SHARE

Related posts

திருமணத்திற்கு சென்ற கார் ஆற்றில் விழுந்து 9 பேர் பலி

Arivazhagan CM

ஆங்கிலப் புத்தாண்டு: முதலமைச்சர் வாழ்த்து

Halley Karthik

ஒருவருக்கொருவர் வெற்றிலை பாக்கு பரிமாறிக் கொள்ளும் பாரம்பரிய திருவிழா

Arivazhagan CM