முக்கியச் செய்திகள் இந்தியா

பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளது – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியியிட்டுள்ள அவர், பெண் குழந்தைகள் பள்ளி கல்வியில் சேரும் விகிதம் 2019-2020ம் ஆண்டுகளில் அதிகரித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொடக்க பள்ளி, நடுநிலை வகுப்பு, உயர்நிலை வகுப்பு, மேல்நிலை வகுப்புகளில் சேரும் மாணவிகளின் விகிதம் கடந்த 2019-20 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக தெரிவித்த மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்கிரியால், 2018-2019ம் ஆண்டில் உயர்நிலை வகுப்புகளில் 76.9% ஆக இருந்த பெண்களின் சேர்க்கை விகிதம் 2019-2020ல் 77.8% ஆகவும், மேல்நிலை வகுப்புகளில் 50.8% ஆக இருந்த சேர்க்கை விகிதம் 52.4% ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

இதேப்போல, 2012-13 முதல் 2019-20 கால கட்டங்களில் மேல்நிலை வகுப்புகளில் சேரும் பெண் குழந்தைகளின் சதவிகிதம் 13% உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். உயர்நிலை வகுப்புகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 2012-13 ல் 68.2% ஆக இருந்த நிலையில் 2019-20ம் ஆண்டில்77.8 % ஆக உயர்ந்துள்ளது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

விவாகரத்து முடிவை கைவிட்டார் நடிகர் நவாசுதீன் சித்திக்

Gayathri Venkatesan

பறவை இனங்கள் அழியும் அபாயம்; காக்கும் பணிகளில் நரிக்குறவர் சமூகம்

Saravana Kumar

போலி தடுப்பூசி: திரிணாமுல் எம்.பி-க்கு திடீர் உடல் நலக்குறைவு

Gayathri Venkatesan