குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் இன்று நடைபெறும் 45வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதுவரை ஒன்பது போட்டிகளில் விளையாடி உள்ள குஜராத் டைட்டன்ஸ் 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9 போட்டிகளுக்கு 2 போட்டிகளில் வெற்றி பெற்று 10 வது இடத்தில் உள்ளது. வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்தில் இரு அணிகளும் களம் இறங்கியுள்ளன. இந்த இரு அணிகளும் இதுவரை மூன்று முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் குஜராத் டைட்ன்ஸ் 2 முறை, ஆர்சிபி ஒரு முறை வென்றுள்ளன.
பெங்களூரு கடைசியாக சன் ரைசர்ஸ் அணியுடன் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இன்றும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத்தை 2வது முறையாக வீழ்த்துமா என்பதை பார்ப்போம்.







