முக்கியச் செய்திகள்

சோம்பேறிகளைத் தீவிரமாகத் தாக்கும் கொரோனா; ஆய்வில் தகவல்!

சோம்பாலாகவும் உடற்பயிற்சி செய்யாமலும் இருப்பவர்களை கொரோனா தொற்று தீவிரமாக பாதிக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவினை நேற்று வெளியிட்டது. இந்த ஆய்வில் சுமார் 50 ஆயிரம் கொரோனா நோயாளிகள் பங்கேற்றனர். அந்த நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி சோம்பலாக இருப்பவர்களை கொரோனா பாதித்தால் அது அவர்களைத் தீவிரமான நிலைக்கு இழுத்துச் செல்கிறது என்பது தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த ஓர் ஆண்டுக் காலத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளாதவர்கள் மற்றும் பிற நோயினால் பாதிக்கப்பட்டவர்களை கொரோனா பாதித்தால் அவர்கள் தீவிர நிலைக்கு அதாவது மரணத்தை கூட தழுவ வாய்ப்புள்ளது என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Advertisement:

Related posts

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

Jeba

இயக்குநர் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு!

அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது; முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு!

Saravana