முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் : பெங்களூரு அணி திரில் வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி, பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்றது.

ஆமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 22 வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும், தேவ்தத் படிக்கல்லும் களமிறங்கினர்.

விராட் கோலி 12 ரன்களிலும், படிக்கல் 17 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 25 ரன்களும், ரஜத் படிதர் 31 ரன்களும் எடுத்தனர். தமது 40 வது அரை சதத்தை எட்டிய டிவில்லியர்ஸ் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுதது, 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 172 ரன்களை இலக்காக கொண்டு, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 21 ரன்களுடனும், ஷிகர் தவான் 6 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 22 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கிடைத்த பந்துகளில் எல்லாம் சிக்சர் பவுண்டரிகளாக விளாசிய ஹெட்மயர், 23 பந்துகளில் அரைசதமடித்தார்.


டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. ஹெட்மயர் 53 ரன்களும், பண்ட் அரை சதமடித்து 58 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்றது.

Advertisement:

Related posts

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்!

Gayathri Venkatesan

2 வெற்றிகளைப் பதிவு செய்த திமுக கூட்டணி!

Karthick

தேர்தல் பரப்புரையை ரத்து செய்த மமதா பானர்ஜி!

Karthick