முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜனைதவிர வேறுஎதையும் உற்பத்தி செய்ய முடியாது : புகழேந்தி

ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜனைதவிர வேறுஎதையும் உற்பத்தி செய்ய முடியாது என்றும், தமிழக அரசு அதை உன்னிப்பாக கவனிக்கும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்று ஒரே நாளில் 15,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 11,13,502 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,08,855 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனாவுக்கு 77 பேர் உயிரிழந்தனர், ஒட்டுமொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 13,728 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயளிகள் கடும் பாதிப்புகுள்ளாகி வருகின்றனர். இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் உற்பத்த்கி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, தூத்துக்கடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜனைதவிர வேறுஎதையும் உற்பத்தி செய்ய முடியாது என்றும், தமிழக அரசு அதை உன்னிப்பாக கவனிக்கும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் கருத்தை ஏற்று, தற்போது, ஆலையை திறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜனை தயாரித்து கொடுத்துவிட்டு, பின்னர் வெளியேறி விடுவதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement:

Related posts

பாப் பாடகி ரிஹானாவுக்கு அமித்ஷா பதிலடி!

Nandhakumar

கொரோனாவால் உயிரிழந்த 34 வயது சின்னத்திரை நடிகை!

Arun

இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!