ஊரடங்கு அறிவிப்பதற்கு முன் வியாபாரிகளிடம் அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும், என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
மே 5-ம் தேதி நடைபெற உள்ள மாநில மாநாடு தொடர்பாக, வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம், சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, அரசின் திடீர் கட்டுப்பாடுகளால், வணிகர்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக கூறினார்.
பொதுமக்களின் உயிர் காக்கும் அரசின் நடவடிக்கைக்கு, வணிகர்கள் முழு ஒத்துழைப்பு தருவதாகவும், அதேவேளையில் பொருளாதாரத்தையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அவர் குறிப்பிட்டார். இனி ஊரடங்கு அறிவிக்கும் முன், வணிகர்களுடன் அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும், என வலியுறுத்திய விக்கிரமராஜா, வணிகர்களின் கடைகளை அதிகாரிகள் பூட்டினால், அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவோம், என எச்சரிக்கை விடுத்தார்.
Advertisement: