முக்கியச் செய்திகள் வணிகம்

கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் அபாயம்

கடந்த மாதம் கடனுக்கான வட்டியை உயர்த்திய நிலையில்,மீண்டும் ரிசர்வ் வங்கி,இன்று ரெப்போ ரேட் விகிதத்தை 50 புள்ளிகள் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். இதனால் வங்கி கடனுக்கான வட்டி விகிதம் மீண்டும் உயரும் அபாயம் உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம், ஜூன் 6 ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்தார். அதன் படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ ரேட் விகிதம் 50 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இனி ரெப்போ ரேட் 4.90 சதவீதமாக இருக்கும் எனவும் அறிவித்தார். உள்நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்க விகிதம், சர்வதேச பொருளாதார காரணிகள், உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரால் ஏற்பட்டுள்ள தாக்கம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஏற்கனவே சென்ற மாதம் கடனுக்கான வட்டியை 40 புள்ளிகள் உயர்த்தியதால் பாதிக்கப்பட்ட, மக்களுக்கு இந்த ரெப்போ ரேட் உயர்வால் மீண்டும் , வீட்டுக்கடன்,வாகனக் கடன், தொழில் கடன் என அனைத்து தரப்பினருக்கும், வட்டி சுமை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச பொருளாதாரங்களின் தாக்கம் , உள்நாட்டு பொருளாதாரத்திலும்,எதிரொலிப்பதால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதேசமயம் இந்தியப் பொருளாதாரம் பலமாகவும், மீள் தன்மையுடன் உள்ளது. இந்திய பொருளாதார செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும். பணவீக்க விகிதமும் 5.7 % லிருந்து , 6.7 % ஆக அதிகரிக்கும் என்ற அவர். வங்கிகளுக்கு அவசர காலத்தில் நிதி தீர்வுகளை வழங்கும், ஸ்டேண்டிங் டெபாசிட் வசதி,மற்றும் மார்ஜினல் ஸ்டேண்டிங் பெசிலிட்டி 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளதால், இவை 4.65 % மற்றும் 5.15 % சதவீதமாகவும் இருக்கும் எனவும் அவர் அறிவித்தார்.

மேலும் கிரெடிட் கார்டுகளை, யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸுடன் (UPI) இணைக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது, இனி கிரெடிட் ​​உபயோகிப்பாளர்கள் , தங்கள் டெபிட் கார்டுகள் மூலம் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்குகளை இணைப்பதன் மூலம், கெரெடிட் கார்டுக்கான, பணப்பரிவர்த்தனைகள் எளிதாக்குகிறது என்றார்
மே, ஜூன் என் இரண்டு மாதங்களில் தொடர் வட்டி உயர்வால் வங்கிகளுக்கு வருவாய் அதிகரிக்கும் என்றாலும், வங்கிகள் வழங்கிய கடனில் வாராக்கடன் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது எனவும் பொருளாதார வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்
ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடிகர் அஜித் செய்த உதவி- பைக் பயணியின் நெகிழ்ச்சிப் பதிவு!

EZHILARASAN D

கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கை – ஆணையர் எச்சரிக்கை

Halley Karthik

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – இன்று ஆலோசனை

Janani