‘காந்தி படம் மாற்றப்படாது’ – ரிசர்வ் வங்கி

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றும் யோசனை ஏதும் இல்லை என ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. ரூபாய் நோட்டுக்களில் இருக்கும் மகாத்மா காந்தி படம் மாற்றப்படும் என தகவல் வெளியானது தொடர்பாக ரிசர்வ்…

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றும் யோசனை ஏதும் இல்லை என ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

ரூபாய் நோட்டுக்களில் இருக்கும் மகாத்மா காந்தி படம் மாற்றப்படும் என தகவல் வெளியானது தொடர்பாக ரிசர்வ் வங்கி இன்று விளக்கமளித்தது. அதில், தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது என குறிப்பிட்டுள்ளது. காந்தியின் படத்தை மாற்ற வேண்டும் என எந்த கோரிக்கையும் வரவில்லை என தெரிவித்த ரிசர்வ் வங்கி, இந்த செய்தியில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளது.

அண்மைச் செய்தி: ‘இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு’

https://twitter.com/news7tamil/status/1533748286687158272

முன்னதாக, ரிசர்வ் வங்கி புதிதாக அச்சிடவுள்ள ரூபாய் தாள்களில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜெ அப்துல் கலாம் ஆகியோரின் படங்களைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே,  பார்வை சவால் உடையவர்களுக்கான சிறப்பு நாணயங்களை, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/news7tamil/status/1533742733890056193

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.