நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்; பாதுகாப்பு அதிகரிப்பு

பிரபல நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம்கான் ஆகியோருக்கு கொலைமிரட்டல் வந்ததையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  பிரபல இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கான் தன்னுடைய குடும்பத்துடன் மும்பை பாந்திரா பேண்ட்…

பிரபல நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம்கான் ஆகியோருக்கு கொலைமிரட்டல் வந்ததையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

பிரபல இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கான் தன்னுடைய குடும்பத்துடன் மும்பை பாந்திரா பேண்ட் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கேலக்சி என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வகிருகிறார். நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம்கான், இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளும் ஆவார். இவர் வழக்கம் போல் நேற்று காலை நடைபயிற்சிக்கு சென்ற போது அவர் வழக்கம் போல் அமரும் இடத்தில் ஒரு கடிதம் இருந்துள்ளது.

அந்த கடிதத்தை பிரித்து படித்த போது அதில் சல்மான்கான் மற்றும் அவரது தந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம்கான் அந்த மிரட்டல் கடிதத்துடன் பாந்திரா பாண்ட் காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பாந்திரா பாண்ட் போலீசார், கொலை விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சல்மான் கானின் தந்தை நடை பயிற்சி செய்யும் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சல்மான் கானுக்கு வந்த மிரட்டல் கடிதத்தை அடுத்து அவரின் பாதுகாப்பை மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சகம் இன்று பலப்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 29ம் தேதி பிரபல பாடகர் சித்து கொலை செய்யப்பட்ட நிலையில் நடிகர் சல்மான் மற்றும் அவரது தந்தை சலீம் கானுக்கு கொலைமிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.