நியாய விலைக் கடை பணியாளர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், சம்பளத்தைப் பிடித்தம் செய்ய கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு, நியாயவிலைக் கடைகளுக்கு தனித் துறை உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜூன் 9ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நியாய விலைக் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் கூட்டுறவுச் சங்கப் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “சட்டம் ஒழுங்கு பிரச்னை, பொது விநியோகத் திட்டப் பணியாளர்களுக்கு பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக, மாற்று பணியாளர்களை கொண்டு நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ” No work No pay” என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்ளின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்” அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா