நேபாளத்தில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் 165 இடங்களில், 124 இடங்களில் ராஷ்டிரிய சுதந்திர கட்சி வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சியின் பாலேந்திர ஷா பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில், நேபாள தேர்தலில் வெற்றி பெற்ற ராஷ்டிரிய சுதந்திர கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சியின் (RSP) தலைவர் ரபி லாமிச்சானே மற்றும் RSP இன் மூத்த தலைவர் பாலேந்திர ஷா ஆகியோருடன் தொலைபேசியில் பேசினேன்.
நேபாளத் தேர்தல்களில் RSP-யின் மகத்தான வெற்றிக்காக இரு தலைவர்களையும் வாழ்த்தினேன். அவர்களின் வரவிருக்கும் புதிய அரசாங்கத்திற்கும், நமது இரு நாடுகளின் பரஸ்பர செழிப்பு, முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்காக அவர்களுடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது. நமது கூட்டு முயற்சிகளால், வரும் ஆண்டுகளில் இந்தியா மற்றும் நேபாள உறவுகள் புதிய உயரங்களை எட்டும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.







