சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “தென் தமிழகத்திலிருந்து கடலோர கா்நாடகம் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (மாா்ச் 11) லேசான மழையும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (மாா்ச் 12) லேசான மழையும் பெய்யக்கூடும்.
தொடா்ந்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) லேசான மழை, மாா்ச் 14, 15 ஆகிய தேதிகளில் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில், செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







