“விரோஷ் திருமணம்” : இன்ஸ்டாவில் திருமண புகைப்படங்களை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா….. இணையத்தில் வைரல்………!

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

தென் இந்திய நடிகர்களான விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி தங்கள் காதலை உறுதி செய்தனர். மேலும் பிப்ரவரி 26ம் தேதி திருமணம் செய்வதாக அறிவித்தனர்.

அதன்படி இன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள மாளிகையில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் கோலகலமாக நடந்து முடிந்தது. இந்த திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்த திருமண விழாவிற்கு “விரோஷ் திருமணம்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 4ம் தேதி ஹைதராபாத்தில் பிரமாண்டமாக ரிசப்ஷன் நடைபெற உள்ளது. அதில் திரை பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா தனது திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பலரும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.